மாறிவரும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி
மாறி வரும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மைசூரு பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலியில் பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் திறமையை வளர்த்துக் கொள்ளுதல், அதை புதுப்பித்துக் கொள்ளுதல், திறமையை மேம்படுத்திக் கொள்ளுதல் ஆகியன மிகவும் முக்கியம் வாய்ந்தவை என அறிவுறுத்தினார்.
இந்த அம்சங்களுக்கு புதிய கல்விக் கொள்கையில் இடமளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
புதிய கல்விக் கொள்கையானது கல்வி பற்றிய பல கோணத்திலான அணுகுமுறையை கொண்டுள்ளது என மோடி கூறினார்.
புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக மாணவர்கள் சர்வதேச தொழில்நுட்பத்தையும், உள்ளூர் கலாச்சாரத்தையும் ஒருசேர கற்றுக் கொள்ள முடியும் எனவும் மோடி குறிப்பிட்டார்.
Comments