94 கோடி ரூபாய் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு : முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் விசாரணை
சுமார் 94 கோடி ரூபாய் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில், முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
2005 முதல் 2012 வரை பிசிசிஐ அளித்த இந்த பணத்தை போலி வங்கி கணக்குகளை துவக்கி முறைகேடு செய்த பரூக் அப்துல்லா உள்ளிட்ட அப்போதைய கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் 10 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.
சிபிஐ இந்த வழக்கில் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
ஊழல் புகாரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த பரூக் அப்துல்லா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
Comments