திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்பை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

0 1519
திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்பை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிப்பது தொடர்பான பணியை அதானி குழும நிறுவனத்துக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மனுவை அந்த மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை நிர்வகிக்கும் பணி தொடர்பான குத்தகையை எடுக்கும் ஏலத்தில் கேரள அரசும் கலந்து கொண்டது.

எனினும் ஏலத்தில் அதானி குழும நிறுவனம் வென்றதால் அந்நிறுவனத்துக்கு மத்திய அரசால் குத்தகை அளிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, குத்தகையை அதானி குழும நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்திருந்தது.

அதை தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments