குழாயிலிருந்து தண்ணீர் போல வெளியேறும் சாம்பல்... அதிர்ச்சியில் வட சென்னை மக்கள்!
வடசென்னை அனல்மின் நிலையம் சாம்பல் கழிவுகளை கொண்டு செல்லும் குழாய்களில் 5 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாம்பல் கழிவு வெளியேறி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வட சென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது . வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் சாம்பல் வெளியேற்றப்படுகிறது. ஆனால், இந்த சாம்பல் கழிவுகளை கொண்டு செல்லும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாம்பல் கழிவுகள் குடிநீர் போல வெளியேறுவதும் தோடர்கதையாகி வருகிறது. தற்போது, இந்த குழாய்களில் ஐந்து இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாம்பல் சுமார் 5 மீட்டர் உயரத்துக்கு வெளியேறி வருகிறது.
இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் சுவாசக்கோளாறு , சரும வியாதிகள் போன்ற பாதிப்புக்ளுக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துருப்பிடித்த இரும்பு குழாய்கள் மூலம் சாம்பல் கழிவுகளை கொண்டு செல்வதால் இது போன்று அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக, வடசென்னை அனல் மின் நிலைய நிர்வாகம் இந்த பிரச்சனையில் தலையிட்டு புதிய குழாய்கள் அமைத்து அவற்றின் மூலம் சாம்பல் கழிவுகளைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments