தமிழக அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்

0 1093
தமிழக அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் செப்டம்பர் 4-ந் தேதி வரை நடைபெற்றது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் விவரம் அக்டோபர் 2-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள சட்டக்கல்லூரிகளில் ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு தொடக்கி வைத்து ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments