பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்த கமல் நாத்..
மத்திய பிரதேச மாநில இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்து முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த இமார்தி தேவி (Imarti Devi) என்பவருக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தாப்ரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாப்ராவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் கமல்நாத் பேசியபோது, இமார்தி தேவியை ஐட்டம் எனும் வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்தார்.
#WATCH: Our candidate is not like her... what's her name? (people shout Imarti Devi, who is former State Minister) You know her better and should have warned me earlier... ye kya item hai: Former Madhya Pradesh CM & Congress leader Kamal Nath pic.twitter.com/eW76f2z8gU
— ANI (@ANI) October 18, 2020
Comments