நாட்டில் நடைபெற்ற மேலும் 2 தங்க கடத்தல் சம்பவங்கள் குறித்து என்ஐஏ விசாரணை

0 903
நாட்டில் நடைபெற்ற மேலும் 2 தங்க கடத்தல் சம்பவங்கள் குறித்து என்ஐஏ விசாரணை

கேரள தங்கக் கடத்தல் குறித்து விசாரிக்கும் என்ஐஏ, மேலும் 2 கடத்தல் சம்பவங்களில் இருக்கும் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவனந்தபுரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் பெயரில் வந்த பார்சலில் தங்கம் கடத்தப்பட்டது குறித்து அந்த அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இதேபோல் ஜெய்ப்பூரில் பதினெட்டரை கிலோ தங்கம் பிடிபட்டது, மியான்மரில் இருந்து கடத்தப்பட்டு டெல்லியில் 83 கிலோவுக்கும் அதிகமாக தங்கம் பிடிபட்டது குறித்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேச விரோத நடவடிக்கைகளுக்காக நடைபெற்ற மிகப்பெரிய சர்வதேச சதியாக இது இருக்கலாம் எனவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு பின்னணியில் இருக்கலாம் எனவும் என்ஐஏ சந்தேகிப்பதாகவும் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments