கடன் தவணையை சரியாக செலுத்தியவர்களுக்கும் சலுகை ?

0 3122
கடன் தவணையை சரியாக செலுத்தியவர்களுக்கும் சலுகை ?

வங்கிக் கடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய உள்ள மத்திய அரசு, அந்த காலகட்டத்தில் முறையாக தவணையை செலுத்தியவர்களுக்கும் சலுகை வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாத காலத்திற்கு, கடன் தவணைகளை தள்ளிவைத்தவர்களுக்கு, 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீதான வட்டியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய உள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக இதுகுறித்த அறிவிப்பை வெளியிட உள்ள மத்திய அரசு, கூட்டுவட்டி தள்ளுபடியால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 மாத காலத்தில் கடன் தவணைகளை முறையாகச் செலுத்தியவர்களுக்கும் சலுகை அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments