இந்தியா - இலங்கை கடற்படையினர் கூட்டுப் பயிற்சி திரிகோணமலையில் இன்று தொடங்குகிறது
இந்தியா- இலங்கை கடற்படைகளுக்கு இடையேயான கூட்டுப் பயிற்சி இன்று தொடங்குகிறது.
இலங்கையின் திரிகோணமலை பகுதிக்கு அருகே மூன்று நாட்கள் நடைபெறும் 'ஸ்லிநெக்ஸ்-20' கூட்டுப் பயிற்சியில் இலங்கை சார்பில் சயூரா என்ற ரோந்துக் கப்பலும், கஜபாகு என்ற பயிற்சிக் கப்பலும் பங்கேற்கின்றன.
இந்திய கடற்படை சார்பில் கமோர்தா, கில்டன் ஆகிய போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. போர்க் கப்பல்களில் இருக்கும் நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள், கடற்படையின் டோர்னியர் ரோந்து விமானம் ஆகியவையும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றன.
The Eighth Edition of annual Indian Navy (IN) – Sri Lanka Navy (SLN) bilateral maritime exercise SLINEX-20 is scheduled off Trincomalee, Sri Lanka from 19th to 21st October 2020: Ministry of Defence pic.twitter.com/jKrJB00vNk
— ANI (@ANI) October 18, 2020
Comments