அருப்புக்கோட்டை : 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்று மக்களை குவித்தாக கடை உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

0 18366

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடை திறப்பு விழா சலுகையாக 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்து கட்டுக்கடங்காத கூட்டம் சேர்த்த கடை உரிமையாளர் மீது தொற்று நோய் பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயம் கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

கொரோனாவை மறந்து, 10 ரூபாய் நாணயத்துடன் ஆயிரக்கணக்கானோர் கடை முன்பு திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிரியாணிக்காக தனிநபர் இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு முண்டியடித்த கூட்டத்தை போலீசார் விரட்டியடித்து கலைத்தனர். மேலும், பிரியாணி அண்டாக்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments