திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

0 1934
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. 48 அடி மொத்த உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியை எட்டியதை அடுத்து, அங்கிருந்து வினாடிக்கு 1084 கன அடி வீதம் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

77 அடி முழு கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72 அடியாக உயர்ந்துள்ளது. கோதையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments