எலித் தொல்லை அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் 6வது ஆண்டாக தொடர்ந்து சிகாகோ முதலிடம்
அமெரிக்காவில் எலி தொல்லை அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில், தொடர்ந்து 6ஆவது ஆண்டாக சிகாகோ முதலிடத்தை பிடித்துள்ளது.
நோய் பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான சேவை நிறுவனமான ஓர்கின் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மற்ற நகரங்களை காட்டிலும் சிகாகோவில் எலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதென தெரிவித்துள்ளது.
எதிர்வரும் குளிர்காலங்களில் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் ஓர்கின் எச்சரித்துள்ளது. சிகாகோவை தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோவில் எலித் தொல்லை அதிகளவில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Comments