நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிடப்பட்ட புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியவில்லை -ஆதார் ஆணையம்

0 3490
நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் பதில்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் கடந்தாண்டு CBCID வெளியிட்ட 10 மாணவ - மாணவிகளை அடையாளம் காண முடியவில்லை என ஆதார் ஆணையம் கை விரித்ததால், விசாரணையில் பின்னடைவு ஏற் பட்டு உள்ளது.

CBCID விசாரணையில், மாணவ- மாணவிகள், பெற்றோர் என மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இவர்களுக்காக ஆள் மாறாட்டம் செய்து,  NEET தேர்வு எழுதியது யார் ? என கண்டுபிடிக்க முடிய வில்லை. 

சந்தேகத்திற்கிடமான 2 மாணவிகள் உள்பட 10 பேரின் புகைப்படங் களை ஒப்படைத்த போதும், பெங்களுருவில் உள்ள ஆதார் ஆணையத்தால்  இவர்கள் யார் ? என கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளி ரஷீத் பிடிபட்டால் மட்டுமே முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வருமென CBCID போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments