பழைய நாணயத்துக்கு 2 பொட்டலம் பிரியாணி இலவசம் : தனிநபர் இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழைய நாணயங்களை கொடுத்து பிரியாணி வாங்குவதற்காக, தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் குவிந்தனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா உள்ளிட்ட பழைய நாணயங்களை கொடுத்தால், 2 பொட்டலம் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
மேலும், காவலர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு பிரியாணி இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கிச் சென்றனர்.
Comments