ஜூலை மாதத்தில் மட்டும் ஜியோவில் 25 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்ததாக டிராய் தகவல்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 25 லட்சம் புதிய சந்தாதாரர்களை பெற்றுள்ளதாக டிராய் வெளியிட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது.
இதே காலகட்டத்தில் ஏர்டெல் 4 லட்சம் சந்தாதாரர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 38 லட்சம் சந்தாதாரர்களையும் இழந்துள்ளன.
இந்தியாவில் மொத்தம் 114 கோடி பேர் செல்போன் பயன்படுத்தும் நிலையில், 95 புள்ளி 5 கோடி இணைப்புகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
இதில் அதிகபட்சமாக 31 கோடி ஆக்டிவ் சந்தாதாரர்கள் ஜியோ சேவையை பயன்படுத்துவதாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தரவுகளில் தகவல் வெளியாகியுள்ளது
Comments