போர் நிறுத்த புதிய உடன்பாட்டிற்கு அர்மீனியா-அஜர்பைஜான் ஒப்புதல்
தென்மேற்காசிய நாடுகளான அர்மீனியா மற்றும் அஜர்பைஜான், போர் நிறுத்த புதிய உடன்பாடிற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
நாகோர்னோ-காராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக கடந்த மாதம் முதல் நடந்து வரும் போரால், நூற்றுக்கணக்கான வீரர்கள், அப்பாவி மக்கள் பலியாகினர்.
ரஷ்யா முன்னிலையிலான முதல் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி, பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வந்தன.
இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments