லடாக் எல்லையில் குவித்துள்ள படைகளை திரும்பப் பெறுவது குறித்து இந்தியா, சீனா இடையே அடுத்த வாரம் 8வது கட்ட பேச்சுவார்த்தை என தகவல்

0 8262

லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது குறித்து இந்தியா-சீனா  ராணுவ நிலையில் அடுத்த வாரம் 8வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால்வன் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து,1,597 கிலோ மீட்டர் நீள  கட்டுப்பாடு எல்லைக் கோடு பகுதியில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளன.

ஏற்கெனவே 7 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும்  தீர்வு எட்டப்படாத நிலையில் 8ஆவது கட்ட பேச்சுவார்த்தையில், படைகளை திரும்பப் பெறுவது, படையினர் இடையே எதேச்சையாகவோ அல்லது அசம்பாவிதத்தாலோ மோதல் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.

கவச வாகன பிரிவு, பீரங்கி படைபிரிவுகளை  முதலில் திரும்ப பெற்று, பிறகு தரைப்படையை திரும்ப பெறலாம் என சீனா தெரிவித்து வருகிறது. ஆனால் சீனாவுக்கு அது சாதகமாகிவிடும் என்பதால் இந்தியா ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments