கர்நாடகாவில் குறைந்த மழை - அணைகளிலிருந்து நீர் வெளியேற்றம் குறைந்தது

0 1231
கர்நாடகாவில் குறைந்த மழை - அணைகளிலிருந்து நீர் வெளியேற்றம் குறைந்தது

கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 13 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்தது.

கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 500 கனஅடியாகவும் நீர் வெளியேற்றம் ஆயிரத்து 500 கனஅடியாகவும் உள்ளது.

கபினி அணைக்கு நீர்வரத்து 5500 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் ஐந்தாயிரம் கன அடியாக உள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் வினாடிக்கு 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரம் கன அடியாக உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 318 கன அடியாக வந்துகொண்டிருந்த தண்ணீர் 8,160 கன அடியாக குறைந்துள்ளது.

டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments