கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விரட்டியடித்ததாக புகார்

0 2010
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விரட்டியடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விரட்டியடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தம், வானிலை எச்சரிக்கையால் 15 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் இருந்த நிலையில், நேற்று சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அதி நவீன ரோந்து படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கைது நடவடிக்கை பயந்து, 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்து கடலில் மீன்பிடிப்பதற்காக வீசிய வலைகளை, அப்படியே விட்டுவிட்டு மீன்பிடிக்காமல் கரை திரும்பியதாகவும் படகு ஒன்றிற்கு 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments