கரீபியன் நாடான ஹைத்தியில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
கரீபியன் நாடான ஹைத்தியில் அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
அதிபர் யோவனில் மோய்ஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் டெசலின்ஸின் 214வது நினைவுதினத்தையொட்டி தலைநகர் போர்டோ பிரின்ஸ்வீதிகளில் கூடிய போராட்டக்காரர்கள், போலீஸ் தடுப்புகளுக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments