அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க முடிவு: சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
கூடுதல் மதிப்பெண் தேவைப்படுவோர் அடுத்த முறை நடைபெறும் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள சுமார் 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
இதனிடையே, இறுதி பருவத் தேர்வு முடிவுகளில் 99% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Comments