ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் எண்ணத்தைக் கைவிட்டதா கேரள அரசு?
மாநிலங்களுக்கான இழப்பீடு தொகைக்கு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கச் சொல்லும் ஜி எஸ்.டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க திட்டமிட்ட கேரள அரசு, அது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் நேற்று ஆலோசனை நடத்த இருந்த நிலையில் அக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது..
மாநிலங்கள் சார்பாக ரிசர்வ் வங்கியின் சிறப்பு சாளரம் வழியாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
மாநில அரசுகள் கடன் வாங்கக்கூறிய ஜிஎஸ்டி கவுன்சிலின் முந்தைய முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஏழு மாநில அரசுகளில் ஒரு சில மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கேரள அரசும் தனது முடிவில் பின்வாங்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
Comments