மும்பையின் புறநகர்ப்பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் வாயுக் கசிவு வாடை: சமூக ஊடகங்கள் வழியாக குவிந்த புகார்களால் திணறும் நிர்வாகம்
மும்பையின் கிழக்கு புறநகர்ப்பகுதிகளில் வாயுக்கசிவு போன்ற வாடை பரவுவதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
காட்கோபர், விக்ரோலி, பான்டுப், செம்பூர், முலுந்த் போவாய் உள்ளிட்ட சிறுநகரங்களில் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.
எங்கோ வாயுக் கசிவு ஏற்பட்டது போல துர்வாடை வீசுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முன்பு இருமுறை இதே போன்ற புகார்கள் வந்தபோது வாடைக்கு காரணம் என்ன என்பதை அறிய மாநகராட்சி நிர்வாகத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை
Comments