குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை: பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறப்பு

0 3326
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளசர்தார் வல்லபாய் படேல் சிலை: பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறப்பு

கொரோனாவால் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை நேற்று முதல்  திறக்கப்பட்டது.

நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் 182 அடி உயரத்தில் இந்த சிலை  அமைக்கப்பட்டுள்ளது.

இதனைக் காண ஒவ்வொரு நாளும் 2,500 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுச்சீட்டுகளை இணைய தளத்தில் பெறலாம் எனத் தெரிவித்துள்ள நிர்வாகம், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments