ஐபிஎல்: தவான் அதிரடியால் சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில், தவானின் அபார சதத்தால் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணியில், தொடக்க வீரர் டூபிளசி 58 ரன்களை குவித்தார்.
அதிரடியாக ஆடிய ராயுடு 45 ரன்களையும், ஜடேஜா 33 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை சேர்த்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில், தொடக்க வீரர் தவான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.
57 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தவான் தனது முதல் சதத்தை பதிவு செய்ய, 19.5 ஓவர்களில் டெல்லி அணி இலக்கை எட்டியது.
வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
Comments