ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க உள்ள புதிய உரிமையாளர்களை கடன்கொடுத்த நிறுவனங்கள் அங்கீகரித்து ஒப்புதல்

0 1362
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க உள்ள புதிய உரிமையாளர்களை கடன்கொடுத்த நிறுவனங்கள் அங்கீகரித்து ஒப்புதல்

திவாலாக்கப்பட்டு, மூடப்பட்ட ஜெட் ஏர்வேசை வாங்க முன்வந்துள்ள புதிய உரிமையாளர்களை, அந்நிறுவனத்திற்கு கடன்கொடுத்த நிறுவனங்கள் அங்கீகரித்து, ஒப்புதல் அளித்திருக்கின்றன.

ஜெட் ஏர்வேசை வாங்க முன் வந்த பல நிறுவனங்கள் எஸ்பிஐ குழு தெரிவித்த தொகை, கடன் தொகைக்கு ஈடாக இல்லாமல் இருந்ததால், பல மாதங்களாக பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

தற்போது கல்ராக் கேபிட்டல் (Kalrock Capital) என்னும் நிதி நிறுவனம் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் தொழிலதிபர் முராரிலால் ஜலான் (Murari Lal Jalan) ஆகியோரின் கூட்டணி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க முற்பட்டது.

இதற்குக் கடன் வழங்கியோர் குழுவைச் சேர்ந்தோர் ஒப்புதல் அளித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு, தற்போதைய நிலையில்,ஊதிய பாக்கி உள்ளிட்ட நிலுவைத் தொகை என, 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன்சுமை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments