பிரான்ஸ் நாட்டில் வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் - 9 பேர் கைது

0 2824
பிரான்ஸ் நாட்டில் வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் - 9 பேர் கைது

பிரான்சில் வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாரிஸ் புறநகர் பகுதியான கன்பன்ஸ்-செயிண்டி-ஹனோரில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி.

இவர் கடந்த 5-ம் தேதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியுள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கூடம் அருகே நேற்று மாலை  சாமுவேல் பெடி நடந்து சென்ற போது, பின் தொடர்ந்து வந்த 18 வயது இளைஞன் கத்தியால், அவரது தலையை துண்டித்து கொலை செய்தான்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையாளியை பிடிக்க முயன்றனர்.ஆனால்  தப்பிச்செல்ல முற்பட்டதால் அவனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

ஆசிரியர் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இது பயங்கரவாத தாக்குதல்’ என்றார். இந்நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments