ஆளில்லா குட்டி விமானங்களில் குண்டு நிரப்பி எதிரிகளை தாக்க சீனா திட்டம்

0 4693
எதிரி நாடுகளின் படைகள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தும் குட்டி ஆளில்லா விமானங்களை சீனா உருவாக்கி உள்ளது.

எதிரி நாடுகளின் படைகள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தும் குட்டி ஆளில்லா விமானங்களை சீனா உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து சீன ராணுவம் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், ராணுவ லாரியின் பின் புறத்தில் 48 துளைகள் கொண்ட ஆயுதம் ஒன்று உள்ளது. அதில் இருந்து 48 குட்டி விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஏவப்படுகின்றன.

40 நிமிடங்கள் வரை பறந்து செல்லும் வல்லமை கொண்ட இந்த குட்டி விமானங்கள் வெடிகுண்டுகளை சுமந்து செல்லக் கூடியவை. இவற்றை தரையில் இருந்தபடியே கட்டுப்படுத்தி, குறிப்பிட்ட இலக்கில் வெடிக்க செய்வதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஹெலிகாப்டரில் இருந்தும் இதனை ஏவி, எதிரிகளின் இலக்கை தகர்க்க முடியுமென காட்டப்பட்டுள்ளது. எதிரிகளின் பீரங்கிகள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட எந்த இலக்கையும் இந்த குட்டி விமானங்கள் மூலம் தகர்க்க முடியுமென சீன கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments