அரபிக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்க கடலில் வருகிற 19-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இதுகுறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக் கடலில் இன்று காலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது மேற்கு வாக்கில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் இந்திய கடற் பரப்பில் இருந்து வெளியே செல்லுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வங்க கடலில் வருகிற 19-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வலுவடையுமென வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments