உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியல்: 94ஆவது இடத்தில் இந்தியா
உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில், இந்தியா 94ஆவது இடத்தில் உள்ளது.
இந்த பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் 107 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடு, உணவுப் பற்றாக்குறை, பொது விநியோகம் ஏழைகளை சென்றடைதல் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு, இந்த உலகப் பட்டினிக் குறியீடு கணக்கிடப்படுகிறது.
அண்டைநாடுகளான வங்கதேசம் 75ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 88ஆம் இடத்திலும் உள்ளன.
இந்தியா, இவை இரண்டு நாடுகளை விட, பின்தங்கிய நிலையில், 94ஆவது இடத்தில் உள்ளது.
Comments