திருப்பதி கோவில் காணிக்கைப் பணத்தை மாநில அரசின் பாண்டுகளில் முதலீடு செய்ய தேவஸ்தான நிதிக்குழு பரிந்துரை
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பல ஆயிரம் கோடி பணத்தை ஆந்திர மாநில அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய தேவஸ்தான நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான தொகையை தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்துள்ளது.
கொரோனா காரணமாக தேவஸ்தானத்தின் முக்கிய வருவாய் மார்க்கங்கள் சரிந்துள்ளன.
இதனையடுத்து செலவுகளை சரிக்கட்ட தேவஸ்தான நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில், மாநில அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் பல ஆயிரம் கோடியை முதலீடு செய்ய அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்கட்சிகள், ஏழுமலையான் கோவில் பொருளாதாரத்தை நலிவடைய செய்ய ஜெகன்மோகன் அரசு திட்டம் வகுத்து இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
Comments