பாஜகவினருக்கு கட்சிதான் குடும்பம்: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு
பாஜகவினருக்கு கட்சிதான் குடும்பம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநில பாஜக அலுவலகத்துக்கு டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பேசிய அவர், காங்கிரசிலும், பிற எதிர்க் கட்சிகளிலும் ஒரு குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்துவதாக விமர்சித்தார்.
தங்களது சகோதரர்கள், சகோதரிகள், மகன்கள் போன்ற வாரிசுகளை காப்பதில்தான் அந்த கட்சிகள் அதிக கவனம் செலுத்துவதாகவும், அக்கட்சியிலுள்ள மருமகன்கள் தங்களுக்கு இடையே சண்டையிட்டு கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால் உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக திகழும் பாஜகவோ, குடும்பம் போல ஒன்றுபட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்
Comments