ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வீ தடுப்பூசிக்கான இரண்டாவது கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி

0 1476
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வீ தடுப்பூசிக்கான இரண்டாவது கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வீ (Sputnik V) தடுப்பூசிக்கான, 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் ஸ்புட்னிக்-வீ தடுப்பூசியை தயாரிக்கும் விதமாக, ஹைதராபாத்தை சேர்ந்த, டாக்டர் ரெட்டி மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன், ரஷ்யா ஒப்பந்தம் செய்தது.

இதையடுத்து, ரஷ்யாவில் குறைந்த அளவு நபர்களிடம் முதற்கட்ட சோதனை முடிந்த நிலையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பிடம், ஸ்புட்னிக்-வீ தடுப்பூசியின் 2ஆவது மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனைகளை அனுமதி கோரி டாக்டர் ரெட்டி நிறுவனம், விண்ணப்பித்தது.

இதனை பரிசீலித்த, DCGI அமைப்பு, ஸ்புட்னிக்-வீ தடுப்பூசியின் 2ஆவது மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments