மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3,553 லாரிகள் பறிமுதல் : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

0 1281
மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3,553 லாரிகள் பறிமுதல் : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3 ஆயிரத்து 553 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

சட்ட விரோதமாக சவுடு மணல் அள்ளப்படுவதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள்,  விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கையில், 3 ஆயிரத்து 717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 244 JCB  இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments