'அன்பழகன்தான் உயிர்! 'மனைவியை தேற்ற முடியாமல் தவிக்கும் மா.சுப்ரமணியன்

0 24539

சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மா.சுப்பிரமணியனின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்பு காரணமாக உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்ரமணியத்துக்கு இரண்டு மகன்கள் உண்டு. மூத்த மகன் செழியன் லண்டனில் மருத்துவராக உள்ளார். இரண்டாவது மகன் அன்பழகன் மாற்றுத்திறனாளி. கடந்த சில தினங்களுக்கு முன் மா. சுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சுப்ரமணியம் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அவரின் மகன் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து, கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள்களுக்கு முன் அன்பழகனுக்கு கொரோனா நெகடிவ் என்று முடிவு வந்ததால், அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில், திடீரென்று இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதில், அன்பழகன் உயிரிழந்தார்.

அன்பழகன் சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். தற்போது, 34 வயதான அன்பழகன் வீல் சேரில்தான் வாழ்ந்து வந்தார். சிறப்புக்குழந்தையான அன்பழகன் மீது சுப்ரமணியமும் அவரின் மனைவி காஞ்சனாவும் மிகுந்த அன்பு வைத்திருந்தனர். அரசியல் , தொழில் காரணமாகவும் மா. சுப்ரமணியம் வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வார். அப்போதெல்லாம் சுப்ரமணியத்தின் மனைவி காஞ்சனா, வீட்டை விட்டு அகலாமல் மகன் அன்பழகனை உடனிருந்து அன்புடன் பார்த்துக் கொள்வார் என்று மா.ச சுப்ரமணியம் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். அன்பழகன் மறைவையடுத்து காஞ்சனாவை தேற்ற முடியாமல் மா. சுப்ரமணியம் மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments