டிஜிட்டல் மீடியாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களுக்கு கடிவாளம்போடும் வகையில் நடவடிக்கை
டிஜிட்டல் மீடியாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களுக்கு கடிவாளம்போடும் வகையில், 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை, நியூஸ் அக்ரிகேட்டர் சேவைகளும், ஆப்களும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
செய்திகள், நடப்பு விவகாரங்களை டிஜிட்டல் மீடியா மூலம் பதிவேற்றும் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 26 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், நியூஸ் அக்ரிகேட்டர் சேவை வழங்கும் Daily Hunt, Helo, UCNews, Opera News, Newsdog போன்ற டிஜிட்டல் மீடியா கம்பெனிகள், சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுபவை ஆக உள்ளன.
இந்தியாவில் செயல்படும் இத்தகைய டிஜிட்டல் மீடியா கம்பெனிகள், அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை பின்பற்ற வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ள மத்திய அரசு, அதற்கு ஓராண்டு கால அவகாசமும் வழங்கியுள்ளது.
Comments