திருவள்ளூரில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 119 உவர்நீர் இறால் பண்ணைகளை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவள்ளூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 119 உவர்நீர் இறால் பண்ணைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டுகளின் துவக்கத்தில் அதிக நீர் இருப்பு கொண்ட பகுதிகளில் இறால் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால் அவற்றில் இருந்து அருகிலுள்ள நீர்நிலைகளில் வெளியேற்றப்பட்ட கழிவு நீரால் நிலத்தடி நீரின் தரம் பாதிப்படைகின்றன.
அசுத்தமான இந்த நீரை விவசாய நிலங்களில் பயன்படுத்த நேரிடும் போது விவசாயம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறிய கழிவுநீரால் விளைநிலங்களும், பழவேற்காடு ஏரியும் பாழாவதாகவும், நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாகவும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தாக்கல் செய்த பதில் மனுவில், 113 நன்னீர் இறால் பண்ணைகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments