அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது- அமைச்சர் கே.பி.அன்பழகன்
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எச்சரித்துள்ளார்.
தருமபுரியில் அதிமுக 49ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பின் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது, வெளிமாநில மாணவர்கள் அதிகமாக சேர்ந்து விடுவதற்கும், கட்டணம் உயர்வுக்கும், 69 சதவீத இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதற்கும் வழிவகுத்துவிடும் என்றார்.
துணை வேந்தர் சுரப்பாவை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்ற தமிழக பாஜக தலைவர் முருகன் புகாருக்கு பதில் அளித்த அமைச்சர் கே.பி. அன்பழகன், துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றார்.
Comments