குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் மட்டுமே கொடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 10-ம் திருநாளான வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும், 2-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை நாள்தோறும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் வேடம் அணிந்து கோவிலுக்கு வர அனுதி கிடையாததால், ஊள்ளூர்களிலேயா வேடமணிந்து விரதத்தை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் || #Thoothukudi | #Kulasekharapatnam https://t.co/Rm0KhLoncu
— Polimer News (@polimernews) October 17, 2020
Comments