திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் சென்னையில் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களிலும், சென்னையிலும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்தியபின் கணக்கில் வராத 40ஆயிரம் ரூபாய் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் 16ஆயிரத்து ஐநூறு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. சார்பதிவாளர்கள் உதயகுமார், சத்தியமூர்த்தி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டவர்கள் ஆவணங்களையும் ரொக்கப்பணத்தையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
Comments