தமிழகம் முழுவதும் ரேசன்கடைகளுக்கு இன்று விடுமுறை- உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,கொரோனா காரணமாக குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை ரேசன் கடை ஊழியர்கள் தங்களின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை10, ஆகஸ்ட் 7 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. எனவே அந்த 3 நாட்களுக்கு ஈடாக செப்டம்பர் 19, அக்டோபர்17 மற்றும் நவம்பர் 21ஆகிய தினங்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேசன்கடைகளுக்கு இன்று விடுமுறை- உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை அறிவிப்பு || #TamilNadu | #RationShop https://t.co/Ei6R6lVeGu
— Polimer News (@polimernews) October 17, 2020
Comments