கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட 4 பிறநோய்களுக்கான மருந்துகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை- WHO
கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்திய நான்கு பிறநோய்களுக்கான மருந்துகள், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், ரெம்டெசிவிர், ஹைட்ராக்சி குளோரோ குயின், லோபினவிர் மற்றும் இண்டெர்பெரான் ஆகிய மருந்துகளை கொண்டு பல நாடுகளில் பரிசோதனைகளை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், உயிரிழப்பு, சுவாசக்கோளாறு மற்றும் மருத்துவமனையில் தங்கியிருப்பது போன்றவற்றில், இந்த மருந்துகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"In June, we announced that we were discontinuing the hydroxychloroquine arm of the study, and in July we announced that we would no longer enrol patients to receive the combination of lopinavir and ritonavir"-@DrTedros #COVID19
— World Health Organization (WHO) (@WHO) October 16, 2020
Comments