பீர் குடித்த வம்சிகாவுக்கு ரூ.10 ஆயிரம் பழுத்தது..! அபராதம் கட்டியும் ஓயாத அலப்பறை

0 8798
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நடிகை வம்சிகா , பீர் குடித்து விட்டு கார் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார். பொதுமக்களிடம் சிக்கி, பொது மன்னிப்பு கேட்ட நடிகை போதையில் விழுந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நடிகை வம்சிகா , பீர் குடித்து விட்டு கார் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார். பொதுமக்களிடம் சிக்கி, பொது மன்னிப்பு கேட்ட நடிகை போதையில் விழுந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தமிழில் சமுதாயம் செய், ஊடுருவல் போன்ற இவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாததால், வெளிஉலகிற்கு பிரபலமாகாமல் இருந்த நடிகை வம்சிகா, போதையில் அதிவேகமாக காரை ஓட்டிச்சென்று சென்னை போக்குவரத்து போலீசில் சிக்கியதால் ஒரே இரவில் பிரபலமானார்..!

பீர் குடித்து காரை ஓட்டிச்சென்று பொதுமக்களிடம் சிக்கிய நடிகை வம்சிகாவும், அவரை மீட்டுச்சென்ற பாஜக பிரமுகர் பாலாஜியும் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் வெள்ளிகிழமை ஆஜராயினர். வம்சிகாவுக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பிரித்தலைசர் சோதனையில் அவர் போதையில் காரை ஓட்டி வந்தது நிரூபிக்கப்பட்டதால் அபராதமாக 10 ஆயிரம் விதிக்கப்பட்டது. அந்த அபராத தொகையை கட்டிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேவந்த வம்சிகா தனது படை பரிவாரங்களோடு செய்தியாளர்களை சந்தித்தார்.

முதலில் காரை அதிவேகமாகமாக ஓட்டவில்லை என்றும் காரில் நிதானமிழக்கவில்லை..! என்றும் தன் மீது புகார் அளித்த பெண்ணுக்கு தன் குடும்பத்தில் பிரச்சனை என்று தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்த வம்சிகா, தான் மட்டுமா குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறேன் ? என்று உரிமைக்குரல் எழுப்பினார்.

தான் கோடம்பாக்கத்தில் நடந்த பார்டியில் பீர் குடித்துவிட்டு வளசரவாக்கம் செல்வதற்காக காரை ஓட்டிச்சென்றதாகவும், போதையில் இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்ததால் தான் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியதாகவும் பின்னர் ஒப்புக் கொண்டார்.

எல்லாவற்றிற்க்கும் மேல் தான் தமிழ் பெண் என்றும் தனது காரில் கே.ஏ என்ற பதிவெண் இருந்ததால் தன்னை முற்றுகையிட்டு பிரச்சனை செய்திருக்கலாமோ ? என்றும் நடிகை வம்சி தனது பிரச்சனையை வேறு விதமாக திசைமாற்ற முயல, விபரீதத்தை உணர்ந்த பா.ஜ.க பிரமுகர் பாலாஜி இந்த முறையும் பவ்யமாக மன்னிப்பு கேட்டு அங்கிருந்து வம்சிகாவை அழைத்துச்சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments