கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

0 2816
கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்ய 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து வந்த கம்மின்ஸ் அதிரடியாக ஆடி 53 ரன்களை சேர்க்க, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா அணி 148 ரன்களை சேர்த்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா - டீகாக் இருவரும் அதிரடியாக ஆடி ரன்குவித்தனர். ரோகித் சர்மா 35 ரன்களில் வெளியேற, இறுதிவரை ஆட்டமிழக்காமல் டீகாக் 78 ரன்களை குவித்தார். இதன் மூலம் அந்த அணி 16.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments