முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு சொந்தமான 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கவுதம சிகாமணிக்கு சொந்தமான 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் 2008 ஆம் ஆண்டில் இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனங்களில் அவர் ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்து பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கிடைத்த 7 கோடி ரூபாய் லாபம் மற்றும் எஞ்சிய பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வராமல் வைத்து இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் கவுதம சிகாமணிக்கு சொந்தமாக தமிழ்நாட்டில் உள்ள 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
Comments