7 போட்டிகளில் 108 ரன்கள்தான்... தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியை துறந்த பின்னணி
பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக, கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பதவியை துறந்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 7 ஆட்டங்களில் விளையாடி 108 ரன்களையே எடுத்துள்ளார். இதில், ஒரு அரை சதம் அடக்கம். இதையடுத்து, கேப்டன் பதவியை துறக்க முடிவு செய்த தினேஷ் கார்த்திக் இது குறித்து கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, அணியின் கேப்டனாக இயன் மோர்கனை நியமித்துள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 - ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார். அந்த சீசனில் நாக்அவுட் சுற்றில் கொல்கத்தா தோற்றது. கடந்த சீசனில் 5- வது இடத்தை பெற்றது. தற்போது, 7 ஆட்டங்களுடன் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 4- வது இடத்தில் உள்ளது. 2019 - ஆம் ஆண்டு உலகக் கோப்பையை மோர்கன் தலைமயில்தான் இங்கிலாந்து அணி வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது .
கொல்கத்தா அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், 'தினேஷ் கார்த்திக்கின் முடிவால் அணி நிர்வாகம் சற்று அதிர்ச்சியடையத்தான் செய்தது. எனினும், அவரின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்' என்றார்.
Comments