2020ம் ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின..!
நடப்பு கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
செப்டம்பர் 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வை, 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். கொரோனாவால் நீட் தேர்வை எழுதாமல் விட்ட சுமார் 290 பேருக்கு அக்டோபர் 14-ல் தேர்வு நடைபெற்றது.
நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியான உடன், ஏராளமானோர் பார்க்க முயன்றதால் தேசிய தேர்வு முகமையின் இணையதளம் முடங்கியது.
நீட் கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணிக்கான NET தேர்வு நவம்பர் 19, 21 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments