ஈழத் தமிழ் மக்களுக்கு நான் எதிரானவன் என்பது போல் என்னை சித்தரிக்க முயல்கிறார்கள் - முத்தையா முரளிதரன்

0 6774
அரசியல் காரணங்களுக்காகவே ஒரு சிலர் என்னை எதிர்த்து வருகிறார்கள் - முத்தையா முரளிதரன்

சிலர் அறியாமையாலும், சிலர் அரசியல் காரணத்திற்காகவும் தன்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் போல சித்தரிப்பது வேதனை அளிப்பதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ள அவர், ஒரு மலையக தமிழனாக தான் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும், ஈழ மக்களுக்கு செய்த உதவிகளே அதிகம் என்று கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு போர் முடிந்த பின் கடந்த 10 ஆண்டுகளாக இரு பக்கமும் உயிரிழப்புகள் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே அது மகிழச்சியான நாள் என்று கருத்து தெரிவித்ததாகவும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments