டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் பயிர்கழிவுகள் எரிக்கப்படுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பயிர்கழிவுகள் எரிக்கப்படுவது குறித்து கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பிலோகுரை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பஞ்சாப் உள்ளிட்ட 3 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பட்டு ஆணையம் ஆகியவை ஓய்வு பெற்ற நீதிபதிக்கு உதவி செய்ய உத்தரவிடப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் குழு அமைக்க உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு விடுத்த வேண்டுகோளையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
Comments