அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்ததற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், தமிழக அரசின் இந்த நிலையை உடனடியாக கடிதம் வாயிலாக மத்திய அரசுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவும், அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு, தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பாவை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரும், முதலமைச்சரும் பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக-வின் கடும் எதிர்ப்பு, #SaveAnnaUniversity போராட்டத்திற்குப் பிறகு #IoE தேவையில்லை என அதிமுக அரசு அறிவித்துள்ளது.
— M.K.Stalin (@mkstalin) October 16, 2020
வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. மத்திய அரசிடம் கடிதம் வழியாகத் தெரிவிக்க வேண்டும்.#DismissSurappa என @CMOTamilNadu பரிந்துரைக்க வேண்டும்!
Comments